Posts

யாழ்ப்பாண இராச்சியம் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள்

Image
ஒரு நாட்டினுடைய வரலாற்றை கட்டியெழுப்புவதற்கு வரலாற்று மூலாதாரங்கள் இன்றியமையாதனவாக காணப்படுகின்றன.அந்தவகையில் யாழ்ப்பாணராச்சிய வரலாற்றை அறிந்த கொள்வதற்கு தொல்பொருட் சான்றுகள் மிகவும் முக்கியமானவையாக காணப்படுகின்றன. இவ் வகையில் சாசனங்கள், கட்டிடங்கள், சிற்பங்கள், ஆலயங்கள், நாணயங்கள் போன்றன குறிப்பிடத்தக்கன. எனவே இவை பற்றி சிறப்பாக நோக்குவோம.

நிஸங்கமல்லன்

Image
பொலநறுவையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்களில் நிஸங்கமல்லனும் ஒருவர் ஆவார். சிறிஜெயகோப் மகாராஜாவுக்கும் பார்வதி மகாதேவிக்கும் நிஸ்ஸங்கமல்லன் பிறந்தான். 1187 – 1196 வரை ஆட்சி செய்தான். 9 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் பல நூற்றாண்டுகளுக்கு பின்னரும் மறக்க முடியாத ஓர் சாதனையை நிஸங்;கமல்லன் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. சூளவம்சம் அவரது கல்வெட்டுக்கள் போன்றவை மூலம் நிஸங்கமல்லனின் வரலாறுகளை அறியலாம். எனவே இவரது சமூக, சமய, நீர்பாசனம் பணிகள் பற்றி சிறப்பாக விரிவாக நோக்குவோம்.

திருக்கோணேச்சரம்

Image
திருக்கோணேச்சரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலைநகரமான திருகோணமலையில் உள்ள  ஒரு சிவன்கோயிலாகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனுமாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு 1300 ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலை கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. எனவே திருக்கோணேச்சர ஆலயத்தின் முக்கியத்துவம் பற்றி சிறப்பாக நோக்குவோம்.

பல்லவர் கால கட்டடக்கலை

Image
பல்லவர் காலமானது கி.பி 6ம் நூற்றாண்டு தொடக்கம் 9ம் நூற்றாண்டு வரையான காலமாகும். இக்காலப்பகுதியில் முதன் முதலில் அழிய முடியாத கருங்கல்லின் ஆலயம் அமைக்கும் முறை ஏற்பட்டது. திராவிடக்கட்டடக்கலையின் முதல்நிலை வளர்ச்சிக்காலமென சிறப்பிக்கப்படும் இக்காலத்தில் தனிக்கருங்கல்லில் ஆலயம் அமைக்கப்பட்ட காலம் இதுவாகும். இக்கால கட்டடக்கலை அம்சத்தினை 4 பிரிவாக வகைப்படுத்தலாம். அவையாவன மகேந்திரவர்மன் பாணி, நரசிம்மவர்மன் பாணி, ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி ஆகும். இதனை சிறப்பாக நோக்குவோம்.

யாழ்ப்பாண இராச்சிய வரலாற்றை அறிய உதவும் இலக்கிய மூலாதாரங்கள்

Image
ஒரு நாட்டினுடைய தொடர்ச்சியான வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு இலக்கியங்களே பெரிதும் துணைபுரிகின்றன. அந்த வகையில் யாழ்ப்பாண இராச்சிய வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு இலக்கியங்கள் மிகவும் அவசியமாகின்றன. அதாவது வையாபாடல், கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை, பரராஜசேகரம,; செகராஜசேகரம், செகராஜசேகரமாலை, ரகுவம்சம்,  தட்சிணகைலாய மகாத்மீயம், மகாவம்சம் , சூளவம்சம்,இராஜவலிய, கோகிலசந்தேசய, வெளிநாட்டவர்களது குறிப்புக்களும்  யாழ்ப்பாண இராச்சிய வரலாற்றை படம்பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடியாக திகழ்கின்றன. இதனை சிறப்பாக ஆராய்வோம்.