திருக்கோணேச்சரம்



திருக்கோணேச்சரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலைநகரமான திருகோணமலையில் உள்ள  ஒரு சிவன்கோயிலாகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனுமாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு 1300 ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலை கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. எனவே திருக்கோணேச்சர ஆலயத்தின் முக்கியத்துவம் பற்றி சிறப்பாக நோக்குவோம்.

கி.பி 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் பீசா இக்கோயிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டு பிரதியொன்றினை போர்த்துக்யே மன்னனுக்கு அனுப்பி வைத்தான் அழிக்கப்பட்ட கற்களைக் கொண்டு திருகோணமலைக் கோட்டையையும் கட்டடினான். கோட்டை சுவரில் 'முன்னே குளக்கோட்டன்' எனும் கல்வெட்டு காணப்படுவதும் கயல் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதும் இக்கோவிலின் தொன்பெருமையை உணர்த்தும். குளக்கோட்டன் என்பானே இக்கோவிலிற்கு திருப்பணி செய்தான்.எனவும் குறிப்பிடப்படுகிறது

திருக்கோணேச்சர ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகியவற்றால் சிறப்பு மிகுந்தது. இத்தலத்தில் இறைவன் கோணேச்சரும் இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப்படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்கள் கழுவி தீர்க வல்லது. தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குகின்றது.

இத்தலத்தின் மீது திருஞான சம்பந்தரால் தேவாரப்பதிகம் பாடப்பெற்றுள்ளது. அவ்வாறே அருணகிரிநாதரும் இத்தலத்தின் மீது திருப்புகழ் பாடியுள்ளார். மேலும் வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர் வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் பதினெட்டு மகாசக்தி பீடங்களில் தேவியார் இடுப்புப் பகுதி பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக்கோவில் போர்த்துக்கேயப்படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக்கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது. என்றும் கூறுகின்றார்கள்.

இவ்வாலயத்தின் பூசைகளும் விழாக்களும் பற்றி பார்கின் இவ் ஆலயத்தில் ஆகம முறைப்படி பூசைகள் இடம்பெறுகின்றன. மகோற்சவம் பங்குனி உத்தரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது. இந்த ஆலயத்தில் சிவராத்திரி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.அத்துடன் கோணேஸ்வரத்தின் மான்மீயத்தை வடதென் மொழி இலக்கியங்களும் போதிக்கின்றன. பெரிய வளமைப்பத்தி, கைலாச புராணம், கோணேசர் கல்வெட்டு, குளக்கோட்டன் கம்பசாத்திரம் திருக்கோணேச்சர புராணம், கைலாயமாலை, வையாபாடல், திருக்கரசைப்புராணம், கதிரமலைப்பள்ளு, என்பன திருகோணமலை வரலாற்றைக் கூறும் தொல்தமிழ் இலக்கியங்களாகும். அத்துடன் வட இந்தியாவில் கி.பி 5ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வாயு புராணத்தில் திருக்கோணேஸ்வரம் குறித்து சொல்லப்படுவதன் மூலம் இலங்கை தீவுக்கு வெளியேயும் அதன் புகழ் பரவியிருந்ததை அறியமுடிகிறது.மேலும் திருக்கோணேச்சர ஆலயத்தின் மீள்கட்டுமானம் பற்றி பார்கின் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு சுமார் 450 வருடங்களின் பின்னர் 1952ல் திருகோணமலையில் உள்ள பெரியார்களால் மீள்கட்டுவிக்கப்பட்டது. முன்னைய கோயிலுடன் ஒப்பிடும்போது இப்போது இருக்கும் கோயில் மிகச்சிறந்தது

.இவ்வாறாக திருக்கோணேச்சரம் ஆலயம் பல வழிகளிலும் சிறப்புப்பெற்று இலங்கையில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.என்று கூறின் அது மிகையாகாது.


உசாத்துணை நுல்கள்


1.சிற்றம்பலம்.சி(1984)'சிந்தனை' ஈழமும் இந்துமதமும்.
2. சுபாஷினி.ப(2011)'கலைக்கேசரி' பொலநறுவைக்கால இந்துப்பண்பாடு.
3. இந்திரபாலா.கா 2009'திராவிட கட்டடக்கலைக்மரபின் சிறப்பியல்பு'

Comments

Popular posts from this blog

நிஸங்கமல்லன்

பல்லவர் கால கட்டடக்கலை