நிஸங்கமல்லன்



பொலநறுவையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்களில் நிஸங்கமல்லனும் ஒருவர் ஆவார். சிறிஜெயகோப் மகாராஜாவுக்கும் பார்வதி மகாதேவிக்கும் நிஸ்ஸங்கமல்லன் பிறந்தான். 1187 – 1196 வரை ஆட்சி செய்தான். 9 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் பல நூற்றாண்டுகளுக்கு பின்னரும் மறக்க முடியாத ஓர் சாதனையை நிஸங்;கமல்லன் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. சூளவம்சம் அவரது கல்வெட்டுக்கள் போன்றவை மூலம் நிஸங்கமல்லனின் வரலாறுகளை அறியலாம். எனவே இவரது சமூக, சமய, நீர்பாசனம் பணிகள் பற்றி சிறப்பாக விரிவாக நோக்குவோம்.

இவரது சமுதாய பணிகளில் முதன்மையானது துலாபாரக் கொடையாகும். இத்தகையதொரு கொடையை வருடத்துக்கு ஒரு தடவை நிஸ்ஸங்கமல்லன் மேற்கொண்டான். இத்தகைய கொடைகள் ஊடாக மக்களுக்கு தேவையான நிலங்கள் நிஸங்கமல்லனால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஊனமுற்றோர்களுக்கும் பிக்குகளுக்கும் பிராமணர்களுக்கும் பல மானியங்களை வழங்கினார்.


சமயப்பணிகளை நோக்கின் தான் ஒரு பௌத்தன் என்பதில் பெருமிதம் கொண்ட நிஸங்கமல்லன் பௌத்த சமயம் சார்பான விகாரைகளையும் கட்டடங்களையும் அமைத்தார். அந்தவகையில் வட்டதாகே, ஹட்டதாகே, ரன்கொத் விகாரை போன்ற விகாரைகளோடு நிஸ்ஸங்கலதா மண்டபம் இவரால் அமைக்கப்பட்டது. அத்துடன் தம்புள்ளையில் உள்ள ஒரு புத்தர் சிலைக்கு தங்கமுலாம் அவர் பூசியதாக குறிப்பிடப்படுகிறது. இந்து சமயப்பணிகளையும் இவர் மேற்கொண்டமைக்கான சான்றுகள் உள்ளன.அதாவது நவக்கிரக சாந்தி என்ற இந்து மதக்கிரியையில் கலந்து கொண்ட இவர் பார்வதி சாஸ்திரத்துக்கு நேரடியாகச்சென்று பல தானங்களை வழங்கியதோடு அங்கு இடம்பெற்ற ஆடல் பாடல் காட்சிகளை இவர் பார்த்து மகிழ்ந்தார்.

மேலும் இவரின் நீர்பாசனப்பணிகள் பற்றி நோக்கின் பண்டவாவி, பாண்டி விஜயக்குளம், நிஸங்கசமுத்திரம் போன்றவற்றை நிஸங்கமல்லன் அமைத்தாக குறிப்பிடப்பட்டாலும் இதில் நிஸங்க சமுத்திரம் என்பது பராக்கிரம சமுத்திரத்தை புனரமைத்து விட்டு அதனையே அவர் நிஸங்கசமுத்திரம் என பெயரிடப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றன.


இவரின் அரசியல் செயற்பாடுகள் பற்றி நோக்கின் பாண்டி நாடுகள் மீது படையெடுத்ததாக இவரது கல்வெட்டு குறிப்பிட்டுள்ளது. எத்தகைய நோக்கத்திற்காக இவர் பாண்டி நாடு மீது படையெடுத்தார். அதன்போர் வியூகம் என்ன என்ற ஒரு தெளிவான விளக்கத்தை எந்த ஒரு ஆதாரமும் குறிப்பிடப்படவில்லை ஆனால் சில பொதுவான ஆய்வாளர்களின் கருத்துப்படி கலிங்க வம்சத்துக்கு ஓர் எதிரான வம்சமாக பாண்டிய வம்சம் காணப்பட்டதால் அதன் ஒரு கட்டமாக அவர் பாண்டி நாடு மீது படையெடுத்திருக்கலாம். என குறிப்பிடப்படுகிறது. இதனால் பாண்டி விஜயக்குளத்தை அமைத்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.அத்துடன் இலங்கையின் வரலாற்றில் அதிகமான கல்வெட்டுக்களை பொறித்த மன்னன். நிஸங்கமல்லன் என்பதும் குறிப்பிடத்தக்கது. கல்பொத்த என்ற மிக நீளமான கல்வெட்டு இவனால் அமைக்கப்பட்டதாகும்.
இவ்வாறாக அனைத்தையும் தொகுத்து நோக்கின் நிஸ்ஸங்கமல்லனது ஆட்சியானது சகல துறைகளிலும் முக்கியத்துவம் பெற்று விளங்கியதோடு அந்நிய வம்ச மன்னர்களில் இலங்கையை ஆட்சி செய்தவர்களில் முதன்மையானவராகவும் சிங்கள மன்னர்களின் ஆதரவைப் பெற்றவராகவும் ஆட்சி செய்த ஒரே மன்னன் நிஸங்க மல்லன் என்பது குறிப்பிடத்தக்கது.

i

உசாத்துணை நுல்கள்
1 கிருஸ்ணராஜா.செ (1999)'இலங்கை வரலாறு 'பாகம்-1,பிறைநிலா வெளியீடு
2. பத்மநாதன்.சி(2013)'இலங்கைத் தமிழ்சாசனங்கள்'இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்

Comments

Post a Comment

Popular posts from this blog

திருக்கோணேச்சரம்

பல்லவர் கால கட்டடக்கலை