யாழ்ப்பாண இராச்சியம் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள்



ஒரு நாட்டினுடைய வரலாற்றை கட்டியெழுப்புவதற்கு வரலாற்று மூலாதாரங்கள் இன்றியமையாதனவாக காணப்படுகின்றன.அந்தவகையில் யாழ்ப்பாணராச்சிய வரலாற்றை அறிந்த கொள்வதற்கு தொல்பொருட் சான்றுகள் மிகவும் முக்கியமானவையாக காணப்படுகின்றன. இவ் வகையில் சாசனங்கள், கட்டிடங்கள், சிற்பங்கள், ஆலயங்கள், நாணயங்கள் போன்றன குறிப்பிடத்தக்கன. எனவே இவை பற்றி சிறப்பாக நோக்குவோம.

இவற்றில் சாசனங்கள் பற்றிப் பார்க்கையில் கோட்டகம தமிழ் சாசனம், நாயன்மார்கட்டு சாசனம், கள்ளியம் காட்டு செப்பேடு, பதவியா வடமொழி சாசனம், யாழ்ப்பாணம் உரும்பிராய் கருணாகர பிள்ளையார் கோவில் கல்வெட்டு, திருமணிக்குழிக் கல்வெட்டு, விஜயநகர நாயக்கர் சாசனம்,  போன்றவற்றின் ஊடாக யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய தகவல்களை அறியமுடிகிறது.

https://youtu.be/Bf2aYWDBLL8

மேலும் இச்சாசனங்கள் பற்றி விரிவாகப் பார்க்கையில் கோட்டகம சாசனம் 13ம் நூற்றாண்டிற்குரியது. இதில் யாழ்ப்பாணத்து அரசன் படைகள் மலைநாட்டில் புகுந்து அரசன் ஒருவரை தோற்கடித்ததைக் கூறுகிறது. நாணயன் மார்கட்டு சாசனத்தில் கலி 3025 தீர்த்தம் கொடுக்க சிங்கையாரியனால் அமைக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. கள்ளியங்;காட்டு செப்பேட்டின் ஊடாக யாழ்ப்பாணத்து மன்னன் பரராச சேகரம் மகாராஜா சிதம்பரம் சென்றமை பற்றி அறியலாம். மேலும் யாழ்ப்பாணம் பிரதான வீதிக் கல்வெட்டின் மூலம் சப்புமல் குமாரய்யா புத்த விகாரையை அமைக்காமல் கந்தவேலுக்கு ஒரு கோயிலை அமைத்தான் என்ற செய்தியை அறியமுடிகிறது. அத்துடன் திருமணிக்குழி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1432ம் ஆண்டிற்குரிய கல்வெட்டு யாழ்ப்பாணயன் பட்டினம் ஈழம் ஆகிய இடங்களுக்கு இலக்கிண தண்டநாயகன் குதிரைப்படை ஒன்றை கடல்வழியாக அனுப்பினான் என கூறப்படுகிறது. இவ்வாறு தொல்லியல் சின்னங்களுள் ஒரு வகைப்பாடான சாசனங்கள் மூலம் யாழ்ப்பாண இராச்சியம் பற்றி அறிய முடிகிறது.

அத்துடன் யாழ்ப்பாண இராச்சியம் பற்றி அறிந்து கொள்வதற்கு முக்கிய தொல்லியல் சின்னங்களாக கட்டிடங்களும் திகழ்கின்றன. அவையாவன நல்லூர் இராசதானி கட்டிட வழிபாட்டு கற்கள், மந்திரிமனை, சங்கிலியன் தோப்பு, நல்லூரான் வாசல், கோப்பாய் சங்கிலியன் கோட்டை போன்றவையாகும். இவற்றினூடாக யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய இன்னோரன்ன அம்சங்களை அறிந்துகொள்ளலாம். மேலும் யாழ்ப்பாண  இராச்சியம் பற்றி அறிய அக்கால இந்து ஆலயங்களும் முக்கியம் பெறுகின்றன. என்று கூறின் அது மிகையாகாது. அதாவது சட்டநாதர் ஆலயம், பூதவராயர், வீரமாகாளி அம்மன் கோவில், நல்லூர் கந்தசவாமி கோவில் போன்ற ஆலயங்களினூடாக யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய தகவல்களை அறிந்த கொள்ள முடிகிறது.

தொல் பொருட் சான்றுகளுள் சிற்பங்களும் குறிப்பிடத்தக்கது. அவற்றின் கலைமரபை வைத்தே எக்காலத்துக்கு உரியது என அடையாளப்படுத்தலாம். இத்தகைய சிற்பங்களுள் நல்லூர் இராச்சியத்தை அறிய உதவும் சான்றுகளுள் முக்கியமாக கிடைக்கப்பெற்ற சிற்பங்களாக சனீஸ்வரர் சிற்பம், பூதவராயர் திருக்குளத்தில் கிடைக்கப் பெற்றதுடன் சோழர் கால கலை மரபினையும் கொண்டதாக காணப்படுகிறது. விநாயகர் கருங்கல் சிற்பம,; ஐயனார் சிற்பம் என்பன பாண்டியர் கால கலைமரபை கொண்டுள்ளன. மகிடாசுரவர்த்தனி செப்புப்படிமம், கயலட்சுமி கருங்கல் சிற்பம், அம்மன் சிலை போன்றன நாயக்கக் கலை மரபுடன் காணப்பட்டது. இவ்வாறு தொல்;லியல் சான்றுகளுடன் ஒரு வகையான சிற்பங்களும் யாழ்ப்பாண இராச்சியம் பற்றி அறிய உதவுகின்றன.

மேலும் யாழ்ப்பாண இராட்சியம் பற்றி அறிய நாணயங்களும் உதவுகின்றன. ஆரியச்சக்கரவர்த்திகளால் சேது,ஆ,கந் நாணயம் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றினூடாக அக்கால அரசியல், பொருளாதாரம், ஆட்சிக்காலம,; நாணயம் கிடைத்த எல்லை வரை மன்னனின் பரவல் போன்ற விடயங்களினை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறாக யாழ்ப்பாண இராச்சியம் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு கல்வெட்டுக்கள், கட்டடங்கள், சிற்பங்கள், ஆலயங்கள், நாணயங்கள் போன்ற தொல்பொருட் சான்றுகள் உறுதுணை புரிகின்றன என்று கூறின் அது மிகையாகாது.
உசாத்துணை நுல்கள்
1.   கிருஸ்ணராஜா.செ (1999)'இலங்கை வரலாறு 'பாகம்-1,பிறைநிலா வெளியீடு
2,பத்மநாதன்.சி(2013)'இலங்கைத் தமிழ்சாசனங்கள்'இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
3,சிற்றம்பலம்.சி(1984)'சிந்தனை' ஈழமும் இந்துமதமும்.

Comments

Popular posts from this blog

நிஸங்கமல்லன்

திருக்கோணேச்சரம்

பல்லவர் கால கட்டடக்கலை