பல்லவர் கால கட்டடக்கலை



பல்லவர் காலமானது கி.பி 6ம் நூற்றாண்டு தொடக்கம் 9ம் நூற்றாண்டு வரையான காலமாகும். இக்காலப்பகுதியில் முதன் முதலில் அழிய முடியாத கருங்கல்லின் ஆலயம் அமைக்கும் முறை ஏற்பட்டது. திராவிடக்கட்டடக்கலையின் முதல்நிலை வளர்ச்சிக்காலமென சிறப்பிக்கப்படும் இக்காலத்தில் தனிக்கருங்கல்லில் ஆலயம் அமைக்கப்பட்ட காலம் இதுவாகும். இக்கால கட்டடக்கலை அம்சத்தினை 4 பிரிவாக வகைப்படுத்தலாம். அவையாவன மகேந்திரவர்மன் பாணி, நரசிம்மவர்மன் பாணி, ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி ஆகும். இதனை சிறப்பாக நோக்குவோம்.

.
முதலில் மகேந்திரவர்மண் பாணி பற்றி நோக்கின். மகேந்திரவர்மன் தனக்கென ஒரு புதிய முறையினை பின்பற்றி ஆலயங்களை அமைத்தான். இவனால் அமைக்கப்பட்ட ஆலயங்கள் குகைக்கோயில் குடைபோகங்கள் எனவும் அழைக்கப்படுகினற்து. இவன் அமைத்த ஆலயத்தின் அமைப்பு முறையானது இயற்கையாக காணப்பட்ட மலைகள் உட்பாக்கமாக குடைந்து இக் குடைவுக்குள் சிற்பங்கள் தூண்கள் என்பவற்றினை அமைத்து ஆலயங்களினைக் கட்டினான். ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட முன்மண்டபத் தூண்களானவை 7 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டதாகவும் அமைக்கப்பட்டன. அத்துடன் கருவறை, அர்த்தமண்டபம், முகப்பு மண்டபம் போன்ற அமைப்பு முறைகளிலும் அமைக்கப்பட்டன. இவ்வாறான அமைப்பு முறையில் அமைந்த ஆலயங்களாக மகேந்திரவாடி, சித்தன்ன வாசல், திருச்சிராப்பள்ளி, பல்லவபுரம், மண்டகப்பற்று போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களினை குறிப்பிடலாம்.

அடுத்து நரசிம்மனது பாணி 2 வது கட்டமாக குறிப்பிடப்படுகிறது. இவனும் குகைக்கோயில்களை அமைத்தான். இவ் அமைப்பு முறைக்கமைய அமைக்கப்பட்ட ஆலயங்களிலே வராகமண்டபம், அதிபராக மண்டபம், மகுடாசுரவர்த்தனி மண்டபம், தர்மராஜ மண்டபம் போன்ற அமைப்பு முறைகள் பிரதானமாகஅமைக்கப்பட்டன. பின் தனக்கென ஒரு தனியான முறையினைப் பின்பற்றி மலை தனிக்கோயில்கள் எனச் சிறப்பிக்கப்படும் ரத அமைப்பு முறை  எனும் புதிய அமைப்பு முறையினை கொண்டு வந்தான். இவ் அமைப்பு முறைக்கு அமைய அமைக்கப்பட்ட ஆலயமாக தர்மராஜரதம், வீமசேனரதம், அர்ச்சுனரம், சகாதேவன் திரௌபதை ரதம் போன்றன குறிப்பிடத்தக்கது. இவை பஞ்சமாணடவரதம் என சிறப்பிக்கப்படுகின்றன. இவை தவிர வளையான் குட்டைரதம், கணேசரதம் மற்றும் வடக்கிலும் தெற்கிலுமாக பிடாரிதம் போன்ற ஆலயங்களும் இக்கால அமைப்பு முறைக்கு சான்று பகர்கின்றன.

அடுத்து ராஜசிம்மனுடைய பாணி பற்றி பார்க்கின் இவனுடைய கால ஆலயங்கள் முற்றுமுழுதாக மாறுபட்ட பாணியை கொண்டதாக அமைந்து காணப்பட்டது. இவனால் அமைக்கப்பட்ட ஆலயங்கள் கற்றளி அமைப்புடைய ஆலயங்கள் என்பர் இவ் அமைப்பு முறைக்கு அமைய அமைக்க பெற்ற ஆலயமாக மாமல்ல புரத்து கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில், வைகுந்த பெருமாள் கோயில், முகுந்தன் கோயில், ஈஸ்வரஆலயம், பனைமலைக்கோயில் போன்ற ஆலயங்கள் கற்றளி அமைப்புடைய ஆலயங்களி;கு சான்று பகர்கின்றன.

பல்லவர் கால கட்டடக்கலையில் இறுதிக்கட்டமாக அமைவது நந்திவர்மன் காலமாகும். இக்காலத்தில் அமைக்கப்பட்ட ஆலயங்கள் சிறியனவாகவும் கலைப்படைப்புக்கள் குன்றியவனாகவும்அமைக்கப்பட்டன. இவ் அமைப்பு முறைக்கேற்ப அமைக்கப்பட்ட ஆலயமாக காஞ்சியில் உள்ள முத்தேஸ்வரம் மதங்கேஸ்வரம் போன்ற ஆலயங்கள் குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/lIDcxdQ5sgc

இவ்வாறாக பல்லவர்கால கட்டடக்கலையானது 4 கட்டமாக பிரிந்து வளர்ச்சியடைந்து சென்றுள்ளமையினை காணமுடிவதோடு பிற்கால கட்டடக்கலையின் வளர்ச்சிக்கும் முன்னோடியாக பல்வர்கால கட்டடக்கலை அம்சங்கள் திகழ்ந்தது. என்றால் அது மிகையாகாது.
உசாத்துணை நுல்கள்
1. இந்திரபாலா.கா 2009'திராவிட கட்டடக்கலைக்மரபின் சிறப்பியல்பு'
2. சிற்றம்பலம்.சி(1984)'சிந்தனை' ஈழமும் இந்துமதமும்.
3.பத்மநாதன்.சி(2011),'இலங்கையில் இந்து சமயம்',குமரன் புத்தக இல்லம்


Comments

Popular posts from this blog

நிஸங்கமல்லன்

திருக்கோணேச்சரம்